Archives: ஏப்ரல் 2021

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உடனடி பாராட்டு

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். [ அப்போஸ்தலர் 16:25 ]

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிடாா் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

இதுவே காலம்

எனது நண்பர்களான அல் மற்றும் கேத்தி ஷிஃபர் அவர்களின் இரண்டாம் உலகப் போரின் காலகட்ட விமானத்தை கண்காட்சியில் பறக்கவிட்டபோது, வயதான போர் வீரர்களின் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாய் தோன்றியது. தாங்கள் பணியாற்றிய போர்கள் மற்றும் அவர்கள் பறந்த விமானங்கள் பற்றி பேசுவதற்காக அவர்கள் முன்வந்தனர். அவர்களின் பெரும்பாலான போர்க் கதைகள் கண்ணீருடன் சொல்லப்பட்டன. பலர் தங்கள் நாட்டுக்கு சேவை செய்யும்போது பெற்ற சிறந்த செய்தி, “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது” என்பதாகும்.

முந்தைய தலைமுறையினரின் இந்த வார்த்தைகள், பிசாசோடு விசுவாச யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்புடையது. பேதுரு “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என்று நம்மை எச்சரிக்கிறார். அவன் பல்வேறு வழிகளில் நம்மை தூண்டி, துன்பத்திலும் துன்புறுத்தலிலும் ஊக்கமின்மையைப் பயன்படுத்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான். பேதுரு தனது முதல் வாசகர்களுக்கும் இன்று நமக்கும் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” (1 பேதுரு 5:8) என்று சவால் விடுக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்கிறோம். எனவே சத்துரு நம்மை யுத்தத்தில் சரணடையச் செய்து நம்மை வீழ்த்த அனுமதிக்கமாட்டோம்.

ஓர் நாள் இயேசு திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். அவர் வரும்போது, அவருடைய வார்த்தைகள் அந்த போர்க்கால வீரர்கள் உணர்ந்ததைப் போன்ற விளைவை ஏற்படுத்தும். நம் கண்களில் கண்ணீரையும், நம் இதயங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்: “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது.”

சாம்பலில் சிங்காரம்

ஓர் நாள் மாலை, என் வீட்டிற்கு அருகில் உள்ள ஓர் காலி இடத்தில், நேர்த்தியான மண் வரிசைகளைக் கவனித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் சிறிய பச்சை இலைகளுடன் சிறிய மொட்டுகள் வெளியே எட்டிப்பார்க்கும். மறுநாள் காலை, அந்த இடத்தில் அழகான சிவப்பு டூலிப் மலர்கள் முளைத்திருப்பதைக் கண்டபோது, நான் என் பாதையில் நிலைநின்றேன்.

முந்தைய இலையுதிர்காலத்தில், ஓர் குழு சிகாகோவின் தெற்குப் பகுதி முழுவதும் காலியாக உள்ள இடங்களில் ஒரு லட்சம் டூலிப் செடிகளை நட்டது. சிறுபான்மையினர் வசிக்கும் சுற்றுப்புறங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கச்செய்வதின் மூலம் (வங்கிகளின் கடன் பாகுபாடு) சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் தீர்மானித்தனர். டூலிப்ஸ் அந்த இடங்களில் இருந்திருக்கக்கூடிய வீடுகளை அடையாளப்படுத்தியது.

தேவ ஜனங்கள் பல சவால்களைச் சகித்திருக்கிறார்கள். தங்கள் தாய்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதிலிருந்து சிவப்பு நிறத்தைப் போன்ற பாகுபாடுகள் வரை. ஆயினும்கூட, நாம் இன்னும் நம்பிக்கையைக் காணலாம். சிறையிருப்பின் காலத்தில் இஸ்ரவேலர்களை தேவன் கைவிடமாட்டார் என்பதை ஏசாயா நினைவுபடுத்துகிறார். சாம்பலுக்குப் பதிலாக அவர்களுக்கு “அழகின் கிரீடம்” கொடுப்பதாக அறிவிக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தையும் (61:1), “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்” தேவன் வாக்குறுதி அளித்தார். இந்த உருவகங்கள் அனைத்தும் அவரது மகிமையைத் தூண்டுகின்றன. மேலும் மனச்சோர்வடைந்த இஸ்ரவேலர்கள் “கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (வச. 3) என்கிறார்.

அழுக்கு மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து தேவனால் சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும் என்பதையும் அந்த டூலிப்ஸ் காட்டுகின்றன. ஒவ்வொரு வசந்த காலத்திலும் எனது சுற்றுப்புறத்திலும் பிற சமூகங்களிலும் நம்பிக்கையை புதுப்பிக்கும் டூலிப் மலர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கடாரா பேட்டன்

உங்கள் சமூகத்தில் சோர்வை மாற்றியமைக்கும் அழகை எங்கே பார்த்தீர்கள்? நம்பிக்கையற்ற இடங்களில் அழகை உருவாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

தேவனே, என் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றினாலும் நீர்
என்னைப் பார்க்க அனுமதித்த அழகிற்காய் உமக்கு நன்றி.

அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். [ ஏசாயா 61:3 ]

சாம்பலில் சிங்காரம்

ஓர் நாள் மாலை, என் வீட்டிற்கு அருகில் உள்ள ஓர் காலி இடத்தில், நேர்த்தியான மண் வரிசைகளைக் கவனித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் சிறிய பச்சை இலைகளுடன் சிறிய மொட்டுகள் வெளியே எட்டிப்பார்க்கும். மறுநாள் காலை, அந்த இடத்தில் அழகான சிவப்பு டூலிப் மலர்கள் முளைத்திருப்பதைக் கண்டபோது, நான் என் பாதையில் நிலைநின்றேன்.

முந்தைய இலையுதிர்காலத்தில், ஓர் குழு சிகாகோவின் தெற்குப் பகுதி முழுவதும் காலியாக உள்ள இடங்களில் ஒரு லட்சம் டூலிப் செடிகளை நட்டது. சிறுபான்மையினர் வசிக்கும் சுற்றுப்புறங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கச்செய்வதின் மூலம் (வங்கிகளின் கடன் பாகுபாடு) சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் தீர்மானித்தனர். டூலிப்ஸ் அந்த இடங்களில் இருந்திருக்கக்கூடிய வீடுகளை அடையாளப்படுத்தியது.

தேவ ஜனங்கள் பல சவால்களைச் சகித்திருக்கிறார்கள். தங்கள் தாய்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதிலிருந்து சிவப்பு நிறத்தைப் போன்ற பாகுபாடுகள் வரை. ஆயினும்கூட, நாம் இன்னும் நம்பிக்கையைக் காணலாம். சிறையிருப்பின் காலத்தில் இஸ்ரவேலர்களை தேவன் கைவிடமாட்டார் என்பதை ஏசாயா நினைவுபடுத்துகிறார். சாம்பலுக்குப் பதிலாக அவர்களுக்கு “அழகின் கிரீடம்” கொடுப்பதாக அறிவிக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தையும் (61:1), “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்” தேவன் வாக்குறுதி அளித்தார். இந்த உருவகங்கள் அனைத்தும் அவரது மகிமையைத் தூண்டுகின்றன. மேலும் மனச்சோர்வடைந்த இஸ்ரவேலர்கள் “கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (வச. 3) என்கிறார்.

அழுக்கு மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து தேவனால் சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும் என்பதையும் அந்த டூலிப்ஸ் காட்டுகின்றன. ஒவ்வொரு வசந்த காலத்திலும் எனது சுற்றுப்புறத்திலும் பிற சமூகங்களிலும் நம்பிக்கையை புதுப்பிக்கும் டூலிப் மலர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.